உலகம்

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் விளைவுகள் மோசமாகும் - அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் விளைவுகள் மோசமாகும் - அமெரிக்கா எச்சரிக்கை

Veeramani

உக்ரைன் மீது ரஷ்யா மீது படை எடுத்தால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அமெரிக்கா ராணுவத்தின் தலைமை அதிகாரியான மார்க் மில்லே, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படை எடுப்பு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார். உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான படை வீரர்களை ரஷ்யா குவித்து வைத்திருப்பதால், எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் மீது படை எடுக்கலாம் என மேற்கத்திய நாடுகள் கூறி வருகின்றன.

உக்ரைனுக்கு ஆதரவாக படைகளையும் மேற்கத்திய நாடுகள் தயார்படுத்தி வருகின்றன. பிரிட்டன் ராணுவம் உக்ரைன் ராணுவத்திற்கு பயிற்சி அளித்து வருகிறது. மற்ற நாடுகள் ஆயுதங்களை அனுப்பிய வண்ணம் இருக்கின்றன. அதே வேளையில் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கும் முயற்சித்து வருகின்றன.