அண்டை நாடுகளுடனும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுடனும் இணக்கமாக செயல்பட இந்தியா முனைப்பாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சீனாவின் கிங்டாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பிரதமர் இவ்வாறு பேசினார். பொது மக்களுக்கு பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, பிராந்திய தொடர்பு, இறையாண்மைக்கு மரியாதை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 10 நாடுகளை கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு அமெரிக்கா தலைமையிலான நேட்டா அமைப்புக்கு போட்டியான அமைப்பாக பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவும் சீனாவும் ஆதிக்கம் செலுத்தும் ஷாங்காய் அமைப்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்தாண்டு முழு நேர உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டன. இதன் மூலம் உலகில் 60% மக்கள் தொகை கொண்ட தேசங்களை உறுப்பினராக கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாறியுள்ளது