உலகம்

தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...! சந்தோஷமாக நாடு திரும்பினர்..!

webteam

தலை ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் அறுவை சிகிச்சைக்கு பின் தங்களது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திரும்பினர்.

பாகிஸ்தானை சொந்த நாடாக கொண்ட சஃபா மற்றும் மார்வா பீபீ ஆகிய இரட்டை சகோதரிகள் பிறக்கும்போதே தலை ஒட்டி பிறந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த வருடம் சிகிச்சைக்காக இங்கிலாந்து தலைநகர் லண்டனிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்போது அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த ஆண்டு சுமார் 50 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்ற மூன்று வேறுபட்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிரிக்கப்பட்டனர். தலை ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளுக்கு லண்டன் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் தீர்வு கண்டனர். இந்நிலையில், அந்த குழந்தைகள் இருவரும் தங்களது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து அவர்களின் தாயார் ஜைனாப் பீபீ கூறுகையில், தனது மகள்கள் சொந்த ஊருக்கு சென்று உறவினர்களை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்தார். எனது பெண்கள் மிகவும் நன்றாக இருக்கிறார்கள். மார்வா நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார். அவருக்கு ஒரு சிறிய சப்போர்ட் மட்டுமே தேவை” எனத் தெரிவித்தார். நாங்கள் அவர்களை நன்றாக பார்த்துக்கொள்வோம். கடவுள் நாடினால் அவர்கள் நடப்பார்கள் என்றார்.