உலகம்

உறவைப் புதுப்பிக்க நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: கத்தாருக்கு சவுதி அரேபியா திட்டவட்டம்

உறவைப் புதுப்பிக்க நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: கத்தாருக்கு சவுதி அரேபியா திட்டவட்டம்

webteam

துண்டிக்கப்பட்ட உறவை மீண்டும் புதுப்பிப்பதற்கு நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என கத்தாருக்கு சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கை லாவ்ரோ, கத்தாரும், சவுதி அரேபியாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பதில் அளித்துள்ள சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் ஜூபியர், நிபந்தனைகளை ஏற்றால்தான் மீண்டும் பேச்சுவார்த்தைத் தொடங்கும் என்று கூறினார். இந்த நிலைப்பாட்டில் சவுதி அரேபியா உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறிக் கத்தாருடனான உறவை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் துண்டித்தன. உறவை மீண்டும் புதுப்பிக்க பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 13 நிபந்தனைகளை அந்நாடுகள் விதித்துள்ளன. இரு தரப்பிற்கும் இடையேயான பிரச்னையைத் தீர்க்க குவைத் ஆர்வம் காட்டுவது போல், அமெரிக்காவும் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளது.