கொலம்பியா நாட்டில் 150 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று நீரில் முழ்கியது. இந்த விபத்தின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கொலம்பியா நாட்டில் 150 பயணிகளை ஏற்றியபடி படகு ஒன்று பீநோல் ஏரியில் சென்றுக்கொண்டிருந்தது. ஏரியின் மத்திய பகுதிக்கு சென்ற போது திடீரென படகு நீரில் முழ்க தொடங்கியது. இதனால் படகிலிருந்த அனைவரும் செய்வதறியாமல் கூச்சலிட்டனர். இதனைக்கேட்ட கரைப்பகுதியிலிருந்த இளைஞர்கள் படகில் இருப்பவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் படகிலிருந்த மக்கள் அங்கும் இங்குமாக ஓடியதில் படகு அழுத்தம் காரணமாக முற்றிலுமாக முழ்கியது. முதற்கட்ட தகவலின்படி இந்த படகு விபத்தில் 3பேர் பலியானதாகவும், 30பேரின் நிலை தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.