உலகம்

இந்தியர்கள் வெளியே... அமெரிக்கர்கள் உள்ளே

webteam

வேலை திறனை அதிகப்படுத்த சி.டி.எஸ். நிறுவனம் அமெரிக்காவில் அதிகளவு பணியாட்களை பணி நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளது

உலகம் முழுவதும் சுமார் 2.6 இலட்சம் பேரை ஊழியர்களாகக் கொண்டு சி.டி.எஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் 1.8 லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். அதில் சுமார் 6000 முதல் 10000 பேரை பணி நீக்கம் செய்யவிருப்பதாக சி.டி.எஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாத இறுதியில் தகவல்களைக் கசிய விட்டது.

இதனிடையே, அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் டொனால்டு டிரம்ப், ‘எச்-1பி’ விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணிபுரியும் வாய்ப்பு அரிதாகி உள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்திய ஐ.டி. நிறுவனங்கள் எச்1பி விசா மூலம் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடுகள் செய்துள்ளதாக அமெரிக்கா புகார் கூறியுள்ளது. இதனால் திறமை அடிப்படையில் ஹெச்-1பி விசா வழங்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. ஹெச்-1பி விசா பெறுவதற்கான லாட்டரி முறை விண்ணப்ப சமர்ப்பித்தலில் தேவைக்கு அதிகமாக பல நிறுவனங்கள் விசாக்களை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேலைத் திறனை அதிகப்படுத்த சி.டி.எஸ். நிறுவனம் அமெரிக்காவில் அதிகளவு பணியாட்களை பணி நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.