COCA COLA x page
உலகம்

அதிகளவில் ரசாயனம்.. குளிர்பானங்களை திரும்பப் பெற்ற COCA COLA நிறுவனம்!

அதிகளவிலான ரசாயனம் உறுதி செய்யப்பட்டதால், ஐரோப்பியாவிலிருந்து தனது சில குளிர்பானங்களை COCA COLA திரும்பப் பெற்றுள்ளது.

Prakash J

உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் குளிர்பான நிறுவனங்களில் COCA COLA (கோகோ கோலா) நிறுவனமும் ஒன்று. இது, பல்வேறு ஃபேவரைட்களில் குளிர்பானங்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், ஐரோப்பா முழுவதும் உள்ள சில நாடுகளில் அதன் பானங்களில் குளோரேட் என்ற ரசாயனம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தது ஆய்வில் தெரியவந்தது.

இதையடுத்து, அவற்றைத் திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் மேற்கொண்ட பரிசோதனையில், சில கோகோ-கோலா பானங்களில் குளோரேட் அதிகமாக இருந்தது தெரியவந்தது.

coca cola

தயாரிப்புகளில் கோக், ஃபாண்டா, மினிட் மெய்ட், ஸ்ப்ரைட் மற்றும் டிராபிகோ பிராண்டுகள் அடக்கம். இங்கிலாந்தில் உள்ள ஏதேனும் கோகோ கோலா தயாரிப்புகளில் அதிக அளவு குளோரேட் உள்ளதா என ஆய்வு செய்து வருவதாக உணவு தர நிர்ணய நிறுவனம் உறுதி செய்துள்ளது. குளோரேட் என்பது குளோரின் அடிப்படையிலான சுத்திகரிப்பு ரசாயனம் ஆகும்.

இது நீர் சுத்திகரிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதலில் பரவலாக பயன்படுத்தப்படும் குளோரின் கிருமிநாசினிகளிலிருந்து பெறப்படுகிறது. இது, குறிப்பாக சிறுவர் மற்றும் குழந்தைகளில் iodine குறைபாட்டை ஏற்படுத்தக் கூடும். 2015ஆம் ஆண்டின் அறிவியல் கருத்துப்படி, குளோரேட்டின் நீண்டகால வெளிப்பாடு சிறுவர்களுக்கு, குறிப்பாக இலகுவான அல்லது மிதமான அயோடின் குறைபாடு உள்ளவர்களுக்கு உடல்நலக் கவலையை ஏற்படுத்துவதாக ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.