உலகம்

பருவநிலை மாற்றம்: அமெரிக்கா கலிஃபோரினியா மாகாணத்தில் கடும் வறட்சி

kaleelrahman

அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடும் வறட்சி நிலவுகிறது.

அணைகள் உள்ளிட்ட பல நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. மேலும் பல நீர் நிலைகளில் நீர் மட்டம் மிகக்குறைவாக உள்ளது. இதன் காரணமாக கலிஃபோர்னியாவின் தெற்கு பகுதியில் தண்ணீர் வினியோகிக்கப்படாததால் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பூங்காக்களில் உள்ள செடிகொடிகள் வாடிக்கிடக்கின்றன. தங்கள் மாகாணத்தில் இது போன்ற வறட்சி ஏற்பட்டுள்ளது இதுவே முதல்முறை என நீர் வினியோக தலைமை அதிகாரி கவலை தெரிவித்தார். இம்மாகாணத்தில் உள்ள சியாரா நெவாடா மலைத்தொடர்களில் பனி உருகி தண்ணீர் நிறைய வரும் என்றும் ஆனால் இந்தாண்டு பனி உருகாததால் நீர் வரவில்லை என்றும் தெரிவித்தார்.

பருவநிலை மாற்ற பிரச்னை இதற்கு காரணமாக இருக்க கூடும் என அவர் கூறியுள்ளார்