பெரு தலைநகர் லிமாவில் வியாபாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பெருவியன் சந்தையில் நீதிமன்ற உத்தரவை மீறி நடை பாதைகளில் வியாபாரிகள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் கடைகளை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. ஆத்திரமடைந்த நடைபாதை வியாபாரிகள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர்.
இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது. இந்த மோதலில் 47 காவல்துறையினர் மற்றும் 12க்கும் அதிகமான வியாபாரிகள் காயமடைந்தனர்.
"பாகிஸ்தான் எங்கள் 2வது வீடு; இந்தியாவுடன் நல்லுறவு" - தலிபான் செய்தித்தொடர்பாளர்