உலகம்

ரஷ்யா - உக்ரைன் போர்: டோக்யோ முதல் நியூயார்க் வரை வலுக்கும் போராட்டம் ஏன்?

JustinDurai

ரஷ்யாவின் படையெடுப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜப்பான் தலைநகர் டோக்யோ முதல் அமெரிக்காவின் நியூயார்க் வரை பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உக்ரைன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ரஷ்ய மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்நாட்டு பாதுகாப்பு, நேட்டோ படையுடனான நீண்ட கால பிரச்னை ஆகியவற்றின் காரணமாகவே உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புடின். அதே சமயம், ஒரே நாளில் உக்ரைனின் கிழக்குப் பகுதி மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுவதற்கு அதிபர் புடின் வழி வகை செய்து விட்டதாக சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதல் ஜப்பானின் டோக்யோ, ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், ஜெர்மனி என பல்வேறு நாடுகளில் ரஷ்யாவுக்கு எதிராக வீதிகளில் பிரம்மாண்ட போராட்டங்கள் நடைபெற்றன.

ரஷ்ய அதிபர் மேற்கொண்ட இந்நடவடிக்கைக்கு சொந்த நாட்டு மக்களே எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டோரை ரஷ்ய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


இதையும் படிக்கலாம்: ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க பிரிட்டன் முடிவு - பிரதமர் போரிஸ் ஜான்சன்