உலகம்

சிகரெட் பழக்கத்தை தடுக்க உதவுமா இ-சிகரெட்?

சிகரெட் பழக்கத்தை தடுக்க உதவுமா இ-சிகரெட்?

webteam

இ-சிகரெட் புகைப்பது ஆரோக்கியமானது என கூறப்பட்டு வந்தநிலையில், இ-சிகரெட் மூலம் சிகரெட் பழக்கத்தை முற்றிலும் தடுக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் இ-சிகரெட் பயன்படுத்துவதால் 100-ல் 50 நபர்கள் புகைப்பிடிப்பதை கைவிட்டுள்ளதாக கொலம்பியா பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இருப்பினும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பல இளைஞர்கள் இ-சிகரெட்டிற்கு அடிமையாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த இ-சிகரெட்கள் பக்கவிளைவுகளை உருவாக்குவதும் கண்டறியப்பட்டுள்ளது. இ-சிகரெட்கள் பயன்படுத்துவதன் மூலம் சிகரெட் பழக்கத்தை கைவிட மூன்று மடங்கு வாய்ப்பு இருப்பதாக தேசிய சுகாதார நிறுவனம் சார்பில் நடத்தபட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு நடத்தப்பட்டு வந்த ஆய்வுகளில் குடிப்பழக்கத்திற்கும், புகைப்பழக்கத்திற்கும் வலுவான தொடர்புள்ளதாகவும், இ-சிகரெட்டை தொடர்ந்து உபயோகித்தால் அவை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கிவிடும் என்றும் இ-சிகரெட் புகைப்பவர்களில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் என்றும் தெரியவந்துள்ளது.