லாஸ்வேகாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கி வைத்திருப்பதற்கான சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜனநாயக கட்சியின் எம்.பி.யும் எதிர்க்கட்சியை சேர்ந்தவருமான கிறிஸ் மர்ஃபி துப்பாக்கிகளை வாங்குபவர்களின் பின்னணி குறித்த தகவல்களை சோதிக்க வகை செய்யும் புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். மற்றொரு எம்.பி.யான நான்சி துப்பாக்கி விற்பனைகளை கண்காணிக்க வலுவான சட்டங்களை கொண்டு வருவது அவசியம் என வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருக்க உரிமங்கள் அவசியம் இல்லை. தனிப்பட்ட முறையில் துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.