சீனாவில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் ஒருவர் தனக்கு காதலியாக வரும் பெண் எப்படி இருக்க வேண்டும் என வைத்துள்ள நிபந்தனைகள் இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
பேராசிரியரான லூ என்பவர் ஆண்டுக்கு ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். தன்னைவிட 10 வயது குறைவாகவும், ஒல்லியாகவும், அழகாகவும், நல்ல நடத்தை கொண்டவராகவும் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 165 சென்டி மீட்டர் முதல் 171 சென்டி மீட்டர் உயரத்தில் இருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சீனாவில், முதல் ஒன்பது இடங்களில் தரவரிசைப்படுத்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும் பேராசிரியர் லூ நிபந்தனை விதித்துள்ளார். இதற்கு இணையத்தில் கடுமையான எதிர்வினைகள் எழுந்து, இந்த விவகாரம் பல்வேறு விவாதங்களுக்கும் வித்திட்டுள்ளது.