உலகம்

சீன வெளியுறவுத்துறை அமைச்சரின் இலங்கை பயணம்: மேம்படுமா இருநாட்டு உறவு?

நிவேதா ஜெகராஜா

இலங்கை உடனான உறவை மேம்படுத்தும் நோக்கில், இரண்டு நாள் பயணமாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இலங்கை சென்றுள்ளார்.

சீனா - இலங்கை இடையேயான ஜனநாயக உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள 18 பேர் கொண்ட குழுவுடன் வாங் யீ கொழும்பு சென்றுள்ளார். அவர்களை அமைச்சர்கள் நாமல் ராஜபக்சே, டீ.வி.ஜானக (D. V. Chanaka) ஆகியோர் வரவேற்றனர். இந்த பயணத்தின்போது இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்‌சே, பிரதமர் மஹிந்த ராஜபக்சே மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே உள்ளிட்டவர்களை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்புகளின்போது துறைமுக நகர் திட்டம் மற்றும் கடன் தவணை சலுகை திட்டங்கள் குறித்து இலங்கை தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.