உலகம்

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ‘உலகின் மிக உயரமான இளைஞன்‘

Veeramani

7 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட, 14 வயதான சீன சிறுவன்  “உலகின் மிக உயரமான இளைஞன்” என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

14 வயது சீன சிறுவன், ரென் கியூ, 7 அடி 3.02 அங்குலமாக வளர்ந்துள்ளார். இதற்காக அவர் “உலகின் மிக உயரமான இளைஞன்” என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். ரென்கியூ சிறுவயதில் மிக உயரமாக வளர்ந்தபோது அவனின் பெற்றோர் பயத்துடன் மருத்துவர்களை அணுகியபோது, அவனுடைய மருத்துவ பரிசோதனை இயல்பாக இருந்தது என தெரிவிக்கின்றனர். ரெனினின் வீட்டில் அவனது பாட்டி 175 செ.மீ உயரமும், அவனது தாய் மற்றும் தாத்தா 190 செ.மீ உயரமும், அப்பா 180 செ.மீ உயரமும் வளர்ந்துள்ளனர் என்றும் கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

ரெனினின் வீடு மற்றும் பள்ளியில் உள்ள மேசைகள் மற்றும் நாற்காலிகள் அவரது உயரத்திற்கு ஏற்றவாறு  வடிவமைக்கப்பட்டுள்ளன. உயரத்தில் முந்தைய சாதனை படைத்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த கெவின் பிராட்போர்டு ஆவார், அவர் தனது டீனேஜ் ஆண்டுகளில் ரெனை விட 5 செ.மீ குறைவாக வளர்ந்திருந்தார்.