உலகம்

“அமைதிக்கு சேதம் ஏற்படுத்த வேண்டாம்” - ஜப்பானை எச்சரித்த சீனா

“அமைதிக்கு சேதம் ஏற்படுத்த வேண்டாம்” - ஜப்பானை எச்சரித்த சீனா

webteam

ஜப்பானை, அமைதி மற்றும் ஸ்திரதன்மைக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொள்ள வேண்டாம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் சீனக் கடல் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருவதற்கு சர்வதேச நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. எனினும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அங்கு செயற்கை தீவுகளை உருவாக்கி, ராணுவத் தளத்தை சீனா அமைத்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம் போன்ற நாடுகள் தென் சீனக் கடல் பகுதியில் தங்களுக்கும் உரிமை‌ இருப்பதாக தெரிவித்து வருகின்றன.

இந்தச் சூழலில் முதன்முறையாக அப்பகுதியில் ஜப்பான் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டது. நீர்மூழ்கிக் கப்பல்க‌ள், போர் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிர பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. ஜப்பானின் இந்த நடவடிக்கை சீனாவை ஆத்திரமடைய வைத்துள்ளது. ராணுவ பயிற்சிகள் மேற்கொள்வதால், தென் சீனக் கடல் பகுதியில் நிலவும் அமைதிக்கும், ஸ்திரதன்மைக்கும் சேதம் ஏற்படலாம் என்றும் ஜப்பானை மறைமுகமாக எச்சரித்துள்ளது.