சீனாவுடனான 60 ஆண்டுகால நட்பைக் கொண்டாட இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அந்நாட்டுக்கு சென்றுள்ளார்.
சீனா சென்ற இலங்கை வெளியுறவு அமைச்சர் திலக் மராபனா, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாட்டுக்கும் இடையே முக்கியமான உடன்பாடுகள் கையெழுத்தாகின. இலங்கை, சீனாவுக்கு இடையேயான நட்பு மலர்ந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து திலக் மராபான பெய்ஜிங் சென்றதாக கூறப்படுகிறது. இரு நாட்டு நல்லுறவு குறித்து பெய்ஜிங்கில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மராபான, வரும் 4 ஆம் தேதி கொழும்பு திரும்புகிறார்.