China Reuters
உலகம்

ஒலியை விட 1.6 மடங்கு வேகம்! சீறிப் பாயும் புது ஆயுதம்! சீனா ஸ்கெட்ச் - நடுங்கிய அமெரிக்கா!

சீனாவின் புதிய நடவடிக்கை ஒன்றால் அமெரிக்க கடும் அச்சத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

சவுதி அரேபியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, கடந்த நவம்பர் மாதம் அன்று ஒரு ஆயுத ஒப்பந்தம் உருவானது. அதிபர் டெனால்ட் டிரம்ப் அறிவித்த இந்த ஒப்பந்தத்தின்படி, F-35 ரக 48 போர் விமானங்கள், அந்த விமானங்களுக்கான உதிரி பாகங்கள் அடங்கிய தொகுப்பு, சவுதி அரேபியாவுக்கு விற்பனை செய்யப்பட இருந்தது. மணிக்கு 2 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடிய இந்த F-35 ரக விமானம், சுமார் 43 ஆயிரம் பவுண்டு உந்துவிசையை உருவாக்கக் கூடியது. மேலும், சுமார் 51 அடி நீளம் கொண்ட இந்த விமானம், எதிரிகளின் ரேடார்களில் சிக்காமல், வான் எல்லைக்குள் ஊடுருவி தாக்கக்கூடிய அதிநவீன வடிவத்தை கொண்டுள்ளது.

24 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட இந்த ஆயுத தொகுப்பு, சவுதி அரேபியாவுக்கு கிடைத்தால், அந்நாட்டின் ராணுவ பலம் பலமடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த அதிநவீன விமானத்தின் தொழில்நுட்பத்தை, சீனா திருட முயற்சிப்பதாக, அமெரிக்காவின் உளவுத்துறை எச்சரித்துள்ளதாம்.

Donald Trump

அதாவது, நீண்ட நாட்களாக, சவுதி அரேபியாவுக்கும், சீனாவுக்கும் இடையே, நல்ல ராணுவ கூட்டுறவு உள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்டு, அமெரிக்கா விற்பனை செய்ய இருக்கும் ராணுவ தொகுப்புகளின் தொழில்நுட்பங்களை, சீனா திருட முயற்சிக்கிறது என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா அச்சம் கொள்வது போல், அந்த தொழில்நுட்பங்களை திருடிவிட்டால், F-35 ரக போர் விமானத்தின் ரோடாரில் சிக்காத தன்மை எப்படி வேலை செய்கிறது என்பது, சீனாவுக்கு தெரிந்துவிடும்.

இதனால், இதைவிட அதிநவீன ஆயுதங்களை உருவாக்குவதோடு, அமெரிக்காவின் அதிநவீன F-35 ரக விமானத்தை வீழ்த்த முடியும். எனவே, எதிர்காலத்தில் போர் நடந்தால் பலத்த பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்று, அமெரிக்கா அச்சம் கொள்வதாக தெரிகிறது. ஆனால், தற்போது வரை, இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்காவின் ராணுவம் வெளியிடவில்லை.