உலகம்

சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்புக்கு அஞ்சி மீண்டும் பொதுமுடக்கம்?

நிவேதா ஜெகராஜா

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீனாவின் தொழில்நுட்ப நகரமான ஷென்ஸென்னில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நகரில் வசிக்கும் சுமார் ஒரு கோடியே 70 லட்சம் பேர் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் காரணமாக சீனாவில் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொழில்நுட்ப நகரம் என அழைக்கப்படும் ஷென்ஸென்னில், ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நோய் பரவலை தடுக்கும் பொருட்டு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜிலின், யாஞ்சி, சாங்சன் ஆகிய நகரங்களிலும் பொதுமுடக்கம் அமலில் உள்ளது.