சீனா விஞ்ஞானிகள் நடத்திய ஆழ்கடல் ஆய்வில் புதிதாக 30 உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் சர்வதேச கடல் ஆணைய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சீனா விஞ்ஞானிகள் ஆழ்கடல் ஆய்வில் புதிதாக கண்டறியப்பட்ட 30 உயிரினங்கள் தொடர்பான காணொலியை வெளியிட்டனர். அதில் வழக்கமான இறாலை விட, செந்நிறமாக காட்சியளிக்கும் இறால்கள், பாம்பு வடிவில் உள்ள ஈல் மீன்கள், பெரிய கண்களுடன் விமானம் போன்று காட்சித் தரும் அரிய வகை மீன் உள்ளிட்ட உயிரினங்கள் இடம்பெற்றுள்ளன.
தூண்டில் இரையுடன், கேமரா பொருத்தப்பட்டு ஆழ்கடலில் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அப்போது தூண்டிலில் இருந்த இரையை உண்பதற்காக உயிரினங்கள் வந்தது கேமராவில் பதிவாகி இருந்தது. வண்ணமயமாக காட்சியளித்த அந்தக் கடல்வாழ் உயிரினங்கள் காண்போர் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளன.