உலகம்

``ரஷ்யா மீதான பொருளாதார தடைக்கு எதிர்ப்பு" - பயமுறுத்தும் கருத்தை தெரிவித்த சீனா

நிவேதா ஜெகராஜா

ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக பொருளாதார தடை விதித்து வரும் நிலையில் அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அதன் மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ளன. இதுதொடர்பாக சீன அரசு தற்போது கருத்து தெரிவித்துள்ளது. அதன்படி சீன வெளியுறவுத்துறை, “ரஷ்யா மீது அறிவிக்கப்படும் பொருளாதார தடைகள் ஒரு தலைபட்சமானது. ரஷ்யாவின் மீதான தடைகளால் 3ஆவது உலகப் போர் மூளும்” என்று தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே பெலாரஸ் அதிபரும், “ரஷ்யாவின் மீது தொடர்ந்து தடைகள் விதிப்பது 3ஆவது உலகப்போர் மூள வழிவகுக்கும்” என்று தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா இடையில் பெலாரசில் பேச்சு தொடங்க உள்ள நிலையில் பெலாரஸ் அதிபர் கருத்து தெரிவித்திருப்பதும் கடும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.