china x page
உலகம்

புதிய தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் காணும் சீனா.. அமெரிக்காவுடன் போட்டி!

புதிய தொழில்நுட்பங்களை பயன்பாட்டுக்குக்கொண்டு வருவதில் சீனா முன்னேறி வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

PT WEB

உலக அறிவுசார் சொத்து அமைப்பின் 2020ஆம் ஆண்டின் தகவலின்படி, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் சீனா 14வது இடத்திலும், அதுவே அதை சிறப்பாக பயன்படுத்துவதில் 47வது இடத்திலும் இருந்தது. ஆனால் தற்போது தொழில்நுட்பங்களைப் சிறப்பான முறையில் பயன்பாட்டுக்கொண்டு வருவதில் சீனா 32வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் போட்டி நிலவி வருகிறது. அமெரிக்காவின் ஓப்பன் ஏஐ நிறுவனம் அறிமுகப்படுத்திய சாட்ஜிபிடி, ஏஐ துறையில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தியது.

china

அதற்குப் போட்டியாக, மிகக் குறைந்த செலவில் டீப்சீக் சாட்பாட்டை உருவாக்கி ஏஐ பயணத்தில் புதிய திருப்பத்தை உருவாக்கியது சீனா. ஆனால், அமெரிக்காவுக்குப் போட்டியாக புதிய தொழில்நுட்பங்களை சீனா உருவாக்கினாலும், உருவாக்கும் தொழில்நுட்பங்களை பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதில் சீனாவைவிட அமெரிக்காவே முன்னிலை வகித்து வருகிறது. அமெரிக்கா அதன் புதிய கண்டுபிடுப்புகளை, எளிதில் வணிகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துவிடும் நிலையில், சீனா அதன் தொழில்நுட்பங்களை அரசுப் பயன்பாடுகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தது. ஆனால், தற்போது இந்தப் போக்கில் மாற்றம் ஏற்படத் தொடங்கி இருக்கிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் - பொருளாதார நிபுணர்கள். புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை அனைத்துத் துறைகளில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதில் சீனா தீவிர கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.