உலகம்

பாண்டா வடிவில் சோலார் தகடு

பாண்டா வடிவில் சோலார் தகடு

webteam

ஒரு பெரிய பாண்டா வடிவத்தில் 248 ஏக்கரில் சூரிய சக்தி பண்ணை ஒன்றை சீனா வடிமைத்துள்ளது. இதில் உள்ள சோலார் தகடுகள் மூலம், 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 

சீனாவில் டேடாங் என்ற இடத்தில் பிரமாண்டமான குங்ஃபூ பாண்டா வடிவத்தில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கண்கள் வெவ்வேறு திசைகளில் பார்ப்பது போல தத்ரூபமாக உருவாக்கியுள்ளனர். இதில் அடுத்த 25 ஆண்டுகளில், 3.2 பில்லியன் கிலோ வாட் மின்சாரம் உற்பத்தியாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. யுனைடெட் நேஷன்ஸ் டெவலப்மென்ட் புரோகிராம் (யுஎன்டிபி) மூலம் இந்த புதிய பண்ணை உருவாகி வருகிறது. இதன் முதல் கட்டப் பணிகள், ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைந்தன. இரண்டாம் கட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று யுஎன்டிபி தெரிவித்துள்ளது. 

பாண்டாவின் கருப்பு பகுதிகள், மோனோ கிரிஸ்டலின் சிலிகான் சோலார் தகடுகளாலும், வெள்ளை மற்றும் க்ரே பகுதிகள் மெல்லிய ஃப்லிம் சோலார் தகடுகளாலும் நிரப்பப்பட்டுள்ளன. 

இந்த புதிய முயற்சி குறித்து சீனாவின் மெர்ச்சன்ட்ஸ் நியூ எரிசக்ட் குரூப்பின் தலைமை செயல் அதிகாரி ஆலன் கூறுகையில், இது போன்று பாண்டா வடிவத்தில் உருவாக்கப்பட்டதன் நோக்கமே, இளைஞர்களைக் கவர்ந்து, அவர்கள் மனதில் சூரிய சக்தியின் பலன்களை தெரிய வைப்பதற்காகத்தான். இது போன்று வருங்காலங்களில் சீனா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாண்டா வடிவ சோலார் தகடுகள் அமைக்கப்படும் என்று கூறினார்.