சீனாவில் கார் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானது. அப்போது கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
சீனாவின் ஹூனான் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து நெடுஞ்சாலையில் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது இடது பக்கத்தில் இருந்து வந்த கார் பேருந்தின் பக்கவாட்டில் மோதியது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வலது பக்க சாலையோர தடுப்பு வேலியில் மோதி கவிழ்ந்தது. இந்தக் காட்சிகள் அனைத்தும் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பேருந்து நெடுஞ்சாலையில் செல்வது வலது பக்கத்தில் வந்த கார் மோதும் காட்சிகள் பதிவாகியுள்ளது. மற்றொரு சிசிடிவி காட்சியில் பேருந்துக்குள் அமர்ந்திருந்த பயணிகளில் சீட் பெல்ட் அணிந்திருந்தவர்கள் பாதுகாப்பாகவும், சீட் பெல்ட் அணியாதவர்கள் தூக்கி வீசப்பட்ட காட்சிகளும் தெளிவாக பதிவாகியுள்ளன. எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த விபத்தில் பயணி ஒருவர் படுகாயம் அடைந்தார்.