சீனாவின் பிரபலமான பெரிய வங்கியில் சேர்மனாக இருந்தவர்தான் லியு லியான்கே. 63 வயதான இவருக்கு மூன்று திருமணங்கள் நடந்திருக்கிறது. ஒரு நாள் லியான்கேவின் மகன் தான் காதலித்த பெண்ணை தனது பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைப்பதற்காக விட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
தனது மகனின் காதலியை பார்த்த லியான்கேவிற்கு உடனே அவர்மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு, தனது மகனை அழைத்த லியான்கே, ’அந்த பெண் உனக்கு தகுதியானவர் இல்லை. ஏழ்மையான பின்னணியிலிருந்து அவர் வந்திருப்பதால், நம்மிடம் இருக்கும் செல்வத்தில் மட்டுமே ஆர்வம் காட்டுவார் .’ என்று கூறி மகனின் மனதை மாற்றியுள்ளார்.
தனது தந்தை சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்த மகனும், தனது காதலை முறித்துக்கொண்டுள்ளார். பிறகு வீட்டில் பார்த்த பெண்ணை மணந்துள்ளார்.
இதன்பிறகுதான்.. லியுன்கேவின் சதித்திட்டமே ஆரம்பித்துள்ளது. தனது மகனின் காதலியை எப்படியாவது கரம்பிடிக்க வேண்டும் என்று நினைத்த அவர், விலையுயர்ந்த ஆடம்பரமான பரிசுப்பொருட்களை அப்பெண்ணுக்கு அனுப்ப தொடங்கியுள்ளார்.
இதனால், ஈர்க்கப்பட்ட அப்பெண்ணும், லியுன்கேவை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். 2023 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணமும் நடந்துள்ளது. இது இவரது நான்காவது திருமணம். மகனின் காதல் முறிந்த 6 மாதத்திலேயே இந்த திருமணம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்தின்போதுதான் லியுன்கேயின் மகனுக்கு தெரிந்தது தனது முன்னாள் காதலிதான் புதிய சித்தி என்று.
இதனால், அதிர்ச்சியடைந்த லியுன்கேவின் மகன் மன அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேசமயம், லியான்கேவின் திருமண வாழ்வும் நீடிக்கவில்லை.
காரணம்; இவர் 141 கோடி லஞ்சம் பெற்றதற்காகவும், 3,887 கோடி அளவுக்கு சட்டவிரோத கடன்களை வழங்கியதாகவும் திருமணம் ஆன சில நாட்களிலேயே கைது செய்யப்பட்டார். இந்த லஞ்ச வழக்கை விசாரித்த ஜினான் இடைநிலை மக்கள் நீதிமன்றம், இவரது சொத்துக்களை பறிமுதல் செய்ததோடு, மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தநிலையில்தான், இந்த அதிர்ச்சிகர சம்பவத்தை செய்திருக்கிறார் லியன்கே. தற்போது சிறைக்கும் சென்றுவிட்டார்.