சீனாவில் நிலச்சரிவு முகநூல்
உலகம்

சீனா: நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி! மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்

சீனாவில் நேற்று (மே 22) பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். என்ன நடந்தது பார்க்கலாம்….

PT WEB

E.இந்து

காலநிலை மாற்றம் காரணமாக சீனாவில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்பம் மற்றும் மிககனமழை ஆகியவை மாறி மாறி காணப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர், கிங்யாங், குய்சோவ் மற்றும் ஹூனான் ஆகிய பகுதிகளுக்கு மிக கனமழைக்கான மூன்றாவது மிக உயர்ந்த அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், அவசரகாலங்களில் உதவுவதற்காக ராணுவப்படையினர் மற்றும் 400க்கும் அதிகமான தீயணைப்புத்துறையினர் அங்கு அனுப்பப்பட்டனர்.

சீனா நிலச்சரிவு

இந்நிலையில், சீனாவின் தென்மேற்கு குய்சோவ் பகுதியில் நேற்று (மே 22) பெய்த கனமழையால் அந்த பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மாயமான 17 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து, கிங்யாங் என்ற கிராமத்திற்கு அருகிலும் மேலும் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 19 பேர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த இரண்டு இடங்களிலும் சிக்கியுள்ளவர்களை மீட்கும்பணியில் பேரிடர் மீட்பு படையினரும், இராணுவத்தினரும், தீயணைப்புத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர். கனமழை காரணமாக இந்த பகுதிகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவால் ஏற்பட்ட இழப்புகளுக்காக சீனாவிற்கு பல நாடுகளின் தலைவர்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.