உலகம்

இந்தியாவுக்கு சீனா மறைமுக எச்சரிக்கை!

இந்தியாவுக்கு சீனா மறைமுக எச்சரிக்கை!

webteam

சீன ராணுவத்துக்கு எதிரிப் படைகளை வீழ்த்தும் வல்லமை உள்ளதாக, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்தியா - சீனா எல்லையில், சிக்கிம் மாநிலம் அருகே டோக்லாம் பகுதியில் சமீபகாலமாக அசாதாரணமான சூழல் நிலவி வரும் நிலையில், ஜின்பிங்கின் இந்த பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீன ராணுவத்தின் 90-வது ஆண்டு விழாவில் பேசிய அவர், ஊருடுவும் எதிரிப் படைகளை வீழ்த்தும் திறமையும், நம்பிக்கையும், சீனாவின் மக்கள் விடுதலைப் படையிடம் உள்ளதாகக் குறிப்பிட்டார். சீனாவின் கனவை உணர்ந்து நாட்டின் பாதுகாப்புக்கும், உலகின் அமைதிக்கும் ராணுவத்தினர் பணிபுரிவார்கள் என ஜி ஜின்பிங் தெரிவித்தார். சீன ராணுவத்தில் 23 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.