உலகம்

சைகை மொழியில் அசத்திய ஒராங்குட்டான் மரணம்

webteam

வட அமெரிக்காவில் சைகை மொழியில் அசத்திவந்த 39 வயது முதிர்ந்த ஒராங்குட்டான் குரங்கு மரணமடைந்தது.

ஜார்ஜியாவில் உள்ள எர்க்ஸ் நேஷ்னல் பிரைமேட் ரிசர்ச் சென்டரில் (Yerkes National Primate Research Center) டிசம்பர் 17, 1977ல் பிறந்தது சான்டென் எனும் ஒராங்குட்டான். அதன் பின் சான்டென் 1997 ஆம் ஆண்டில் அட்லாண்டாவில் உள்ள விலங்கியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டது.

சான்டென் குறித்து 2014 ஆம் ஆண்டு ஆவணப்படம் ஒன்று எடுக்கப்பட்டது. சைகை மொழியைக் கற்றுக்கொண்ட சான்டென் தன்னை நன்கு அறிந்தவர்களிடம் திறமையாக பேசும் திறன் கொண்டது. 39 வயதை கடந்துள்ள இந்த குரங்கு அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் திங்களன்று மரணமடைந்தது. இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததால் சான்டென் இறந்ததாக உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

சான்டென் குறித்து மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் கூறுகையில், ’சண்டேன், தான்  அறியாத மனிதர்களைச் பார்த்தால் வெட்கப்படும், 20 ஆண்டுகளாக எங்களுடன் இருந்தது. அனைவருடனும் மிகவும் பாசமாக பழகும் தன்மை கொண்ட சான்டென் இல்லாமல் போனது எங்களுக்கு ஒரு பெரிய இழப்பு’ என்று தெரிவித்தார்.