கென்யாவில் நடந்த அதிபர் தேர்தல் செல்லாது எனவும், மறுதேர்தல் நடத்தவும் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கென்யாவில் நடந்த அதிபர் தேர்தல் செல்லாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. தேர்தலில் வெற்றிபெற்ற அதிபர் உகுரு கென்யாட்டாவை எதிர்த்துப் போட்டியிட்ட ரைலா ஓடிங்கா தொடர்ந்து வழக்கில் நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கினர். இன்னும் 60 நாள்களில் மீண்டும் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் சுமார் 14 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் உகுரு கென்யாட்டா வெற்றி பெற்றிருந்தார். இந்த தேர்தலில் பலமுறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.