உலகம்

ஆப்பிரிக்கா: சாட் அதிபர் இட்ரிஸ் டெபி சுட்டுக் கொலை

Sinekadhara

ஆப்பிரிக்காவில் உள்ள சாட் நாட்டில் அதிபர் இத்ரிஸ் போராளிக்குழுக்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான சாடில் கடந்த 30 ஆண்டுகளாக இட்ரிஸ் அதிபராக இருந்து வந்தார். 68 வயதாகும் அவர், கடந்த 11ஆம் தேதி நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள், ராணுவத்துக்கு எதிராக சண்டையில் ஈடுபட்ட பகுதிக்குச் சென்ற இட்ரிஸ் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

லிபியா எல்லையில் உள்ள காட்டுப் பகுதிக்கு தலைநகரில் இருந்து அதிபர் வந்தது ஏன் என்று தெரியவில்லை என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.