பொதுமக்களிடம் இருந்து பழைய செல்போன்கள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி முறையில் ஒலிம்பிக் பதக்கங்கள் செய்யும் பணிகளை ஜப்பான் அரசு மேற்கொண்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படும் ஒலிம்பிக் பதக்கங்களுக்காக பொதுமக்களிடம் இருந்து பழைய செல்போன்கள் சேகரிப்பட்டு வருகின்றன. டோக்கியோவில் அமைக்கப்பட்டுள்ள மறுசுழற்சி மையத்திற்கு ஏராளமான பொதுமக்கள் தங்களின் பழைய செல்போன்களை ஒப்படைத்து வருகின்றனர். சேகரிக்கப்படும் பழைய செல்போன்களில் இருந்து 40 கிலோ தங்கம், 2 ஆயிரத்து 930 கிலோ வெள்ளி, 2 ஆயிரத்து 994 கிலோ வெண்கலம் ஆகியவற்றை பிரித்தெடுக்க உள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். அதனைக்கொண்டு 2020-ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான 5 ஆயிரம் பதக்கங்களை செய்யவிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். தங்களது பழைய செல்போன்கள் ஒலிம்பிக் பதக்கங்களாக மாறவிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என ஜப்பான் மக்கள் தெரிவித்தனர்.