உலகம்

கேட்டலோனியா நாடாளுமன்றம் கலைப்பு: காவல்துறை தலைவர் நீக்கம்

webteam

கேட்டலோனியாவை தனது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஸ்பெயின் எடுத்து வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கேட்டலோனியாவின் காவல்துறை தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கேட்டலோனியாவை தனி நாடாக பிரகடனப்படுத்தி அதன் நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது. இதனை ஏற்க மறுத்த ஸ்பெயின் நாட்டு பிரதமர் மரியானோ ரஜோய், கேட்டலோனியா தலைவர், துணைத் தலைவர், அமைச்சர்கள் உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

கேட்டலோனிய நாடாளுமன்றத்தை கலைப்பதாக தெரிவித்த அவர், டிசம்பர் 21ம் தேதி புதிய கேட்டலோனிய நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக காவல்துறை தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஸ்பெயின் நாட்டின் நடவடிக்கைகள் கேட்டலோனிய மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.