பிரிந்து சென்ற மனைவி மீண்டும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவிக்காத காரணத்தால் மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்
சவுதியின் தெற்கு செட்டாவைச் சேர்ந்தவர் முனிரா(29). இவர் தன்னுடைய மனைவியிடம் இருந்து 2 மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுள்ளார். அவர்களுக்கு குழந்தைகளும் இருக்கும் நிலையில் மீண்டும் சந்தித்து பேச வேண்டுமென மனைவியிடம் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு பிறகு முனிரா, மனைவியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர்கள் உரையாடல் வாக்குவாதமாக மாறியுள்ளது. அப்போது கோபமடைந்த முனிரா மனைவியை சுவரோடு வைத்து மோதியுள்ளார். இதில் முனிராவின் மனைவி படுகாயம் அடைந்துள்ளார். அப்போதும் கோபம் அடங்காத கணவர் தன்னுடைய சுத்தியலால் மனைவியின் தலையில் தாக்கி அடித்தே கொலை செய்துள்ளார்.
பின்னர் இது குறித்து தன்னுடைய தாய்க்கு தகவலை தெரிவித்துள்ளார் முனிரா. பின்னர் தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முனிராவையும், அவர் கொலைக்கு பயன்படுத்திய சுத்தியலையும் மீட்டனர்.
இது குறித்து தெரிவித்த உயிரிழந்த பெண்ணின் உறவினர் ஒருவர், அவர்களுக்குள் இருக்கும் பிரச்னையை பேசி சரிசெய்யவே தன் கணவரை சந்திக்க அவர் சென்றார். அவர்கள் பிரிவதற்கும் இரண்டு மாதத்திற்கு முன்னர் முனிரா தச்சர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். ஒழுக்கமாக நடந்துகொள்ளவில்லை என அவரது நிர்வாகம் அவரை வேலையை விட்டு நீக்கியது என தெரிவித்துள்ளார்