உலகம்

ஆக்‌ஷன் படக் காட்சியை மிஞ்சும் அதி பயங்கரமான கார் விபத்து

webteam
ஆக்‌ஷன் படக் காட்சியைப் போல இருக்கும் கார் விபத்தின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. 
 
சிசிடிவி காட்சிகள் வந்த பின்னால் நமக்குப் பல கோரமான விபத்துகளின் காட்சிகள் கிடைத்து வருகின்றன. ஒரு விபத்து எதனால் ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது? போன்ற விசாரணைகளுக்கு இந்தக் காட்சிகள் மிகவும் உதவியாக உள்ளன. அப்படி ஒரு கோரமான விபத்து காட்சி இப்போது வெளியாகியுள்ளது. சாலையில் உள்ள ரவுண்டானாவைக் கூட கவனிக்காமல் ஒரு கார் சீறிப் பாய்ந்து வரும் காட்சி அதில் பதிவாகியுள்ளது. பார்ப்பதற்கு அசல் சினிமா சண்டைக் காட்சியைப் போல் உள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறியுள்ளது.
 
 
போலந்து நாட்டில் உள்ள ஒரு சாலையில்தான் இந்த கார் விபத்து அரங்கேறியுள்ளது. இந்த கார், சாலையில் உள்ள ரவுண்டானாவில் முதலில் மோதியது. அதன்பின் அதே வேகத்தில் தூக்கி வீசிப்பட்டு அருகில் உள்ள பாலத்தின் தூணில் போய் இடித்து நொறுங்குகிறது. இந்தக் காட்சியை போலந்து காவல்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இதனை இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். ஆகவே இது வைரலாகியது.
 
 
இந்த விபத்து குறித்து டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஸ்விஃப்ட் கார் முதலில் ஒரு மரத்தை வேகமாக வந்து தட்டியது. அதன் பின் நிலையிழந்த அந்த வாகனம், அருகிலிருந்த ராபியன் கிராம கல்லறை கட்டிடங்கள் மீது மோதியுள்ளது. இதனால் வாகனம் தீப்பிடித்தது. அதன் உள் 41 வயது மதிக்கத் தக்க ஓட்டுநர் இருந்துள்ளார். அதன்பின் வந்த தீயணைப்பு வீரர்கள் ஓட்டுநரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.  இந்த விபத்தில் வாகனம் முற்றிலும் சேதமாகிவிட்டது. 
 
மேலும் வாகனம் ஓட்டும் போது ஓட்டுநர்  போதையிலிருந்தாரா என்பதை அறிய  போலீசார் மருத்துவ அறிக்கைக்காகக் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
 
 
https://www.facebook.com/9NewsSydney/videos/707781606627226/?t=4