cancellation of the visa exemption previously granted to Indians Reuters
உலகம்

இந்​தி​யர்​களுக்கு விசா விலக்கு ரத்து : மலேசியா போய் இப்படியா செய்வார்கள்... காரணம் என்ன ?

இந்​தி​யர்​களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா விலக்கு நடைமுறையை நிரந்தரமாக ரத்து செய்து மலேசிய அரசு உத்தரவிட்டுள்ளது.

Praveen Joshva L

உலகளாவிய கொரோனா தொற்றுக்கு பின்னர் சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளை ஈர்க்க பல்வேறு நாடுகளும் சிறப்பு திட்டங்களை கொண்டுவந்தன. அந்த வகையில் கடந்த டிசம்பர் 2023-ல் இந்தியர்கள் விசா இல்லாமல் மலேசியாவில் 30 நாட்கள் தங்கிக்கொள்ள மலேசிய அரசு அனுமதி அளித்தது. தொடர்ந்து இந்த அனுமதி டிசம்பர் 31, 2026 வரை நீட்டிக்கப்பட்டது.

ஆனால், சுற்றுலா விசா விலக்குச் சலுகையைப் பயன்படுத்தி மலேசியாவிற்குச் செல்லும் சிலர், அங்கு சட்டவிரோதமாகத் தங்கி வேலை செய்வது போன்ற முறைகேட்டில் ஈடுபட்டு வந்தனர். அதோடு சிலர் சட்டவிரோத செயலிலும் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான 30 நாட்கள் விசா இல்லாத நுழைவுச் சலுகை (Visa-Free Entry) டிசம்பர் 31, 2026 உடன் முடிவடைகிறது என்றும், அது மேலும் நீட்டிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தாலும், அவர்களின் பயணம் ஜனவரி 1, 2027 அல்லது அதற்குப் பிறகு அமைந்தால் கட்டாயம் விசா எடுக்க வேண்டும் என்றும் மலேசிய குடிவரவுத் துறை அறிவித்துள்ளது.

மேலும் டிசம்பர் 31, 2026-க்கு முன்பாக மலேசியாவிற்குள் நுழைந்துவிட்டு, ஜனவரி 2027-ல் இந்தியா திரும்புபவர்களுக்கு விசா தேவையில்லை என்றும், ஆனால், அங்கிருந்து சிங்கப்பூர் அல்லது தாய்லாந்து சென்றுவிட்டு ஜனவரியில் மீண்டும் மலேசியாவிற்குள் நுழைந்தால், அது புதிய நுழைவாகக் கருதப்பட்டு விசா கட்டாயமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் புதிய விசா விண்​ணப்​பங்​களை 2026 டிசம்​பர் 1-ம் தேதி முதல் 'MyVISA' இணை​யதளம் வழி​யாக சமர்ப்​பிக்​கலாம் என்றும், விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலோ அல்லது பயணத் திட்டம் மாறினாலோ விசா கட்டணம் எந்தக் காரணத்தைக் கொண்டும் திரும்ப வழங்கப்படாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.