milk
milk twitter
உலகம்

கனடா: பிரிட்ஜிலிருந்து பால் எடுத்து குடித்த ரியல் எஸ்டேட் முகவர்... காத்திருந்த பேரதிர்ச்சி!

Prakash J

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்தவர் மைக் ரோஸ். இவர் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்டாக உள்ளார். இதில் வீடுகளை மற்றவருக்கு காண்பிப்பதை தொழிலாக கொண்டிருந்தார் மைக். அப்படி சமீபத்தில் விற்பனைக்காக இருந்த வீடு ஒன்றுக்கு சென்றுள்ளார் அவர். அப்போது அவருக்கு தாகம் எடுத்ததால் வீட்டில் தண்ணீர் குடிக்கச் சென்றுள்ளார்.

இதற்காக, அந்த வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டியை திறந்து தண்ணீர் குடிக்க நினைத்துள்ளார். ஆனால், குளிர்சாதன பெட்டியில் தண்ணீர் இல்லாதால் அதிலிருந்த பாலை எடுத்து கொஞ்சம் குடித்துள்ளார். மீதமிருந்த பாலை குளிர்சாதான பெட்டியின் உள்ளேயே வைத்துள்ளார்.

Milk

வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி குளிர்சாதன பெட்டியில் உள்ள பாலை அவர் குடித்ததாகக் கூறப்படுகிறது. இவ்விஷயம் வீட்டின் உரிமையாளருக்கு சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்துள்ளது. இதனால், அந்த உரிமையாளர் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து, மைக் ரோஸுக்கு 20,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மைக் ரோஸ் நிறுவனத்திடமும் வீட்டு உரிமையாளரிடமும் மன்னிப்பு கேட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மைக் ரோஸ், இதற்கு முன்புகூட இதுபோன்ற ஒரு பிரச்னையில் ரூ. ஆயிரம் டாலர் அபராதம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.