அக்டோபர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில் சொந்த கட்சியில் இருந்து ட்ரூடோவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியதோடு அவருக்கு ஆதரவு அளித்து வந்த என்.டி.பி. கட்சியும் தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. மக்கள் மத்தியிலும் ஆதரவு குறைந்த நிலையில் ட்ரூடோ இந்த முடிவை எடுத்துள்ளார்.அதேபோல் ஆளும் லிபரல் கட்சியின்தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக ட்ரூடோ அறிவித்துள்ளார்.
அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும்வரை ட்ரூடோ தொடர்ந்து பதவியில்இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும் 8ஆம் தேதி நடைபெறும் கட்சிக் கூட்டத்தில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். 2015 ஆம் ஆண்டு ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக பதவியேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் தருவதாக ட்ரூடோ மீது இந்தியா குற்றச்சாட்டுகளை வைத்திருந்தது. இந்நிலையில் அவரது ராஜினாமா இந்திய அளவிலும் முக்கியத்துவம் பெறுகிறது.