கொரோனா தொற்று கைகள் மூலம் மூச்சுக்குழல் வழியாக உடலுக்குள் நுழைந்துவிடும் என்பதால் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்பது பிரதான அறிவுரையாக உள்ளது. அதேபோல் வெளியில் பயணம் செய்வோர் கைகளில் தேய்த்து பயன்படுத்தும் கிருமிநாசினியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் முகக் கவசங்கள் அணிவதை விட கைகளை அடிக்கடி கழுவுவது, முகத்தில் கை படாமல் பார்த்துக் கொள்வது ஆகியவையே கொரோனா பரவலை தடுக்க உதவும் என உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால மருத்துவ சேவைகள் பிரிவு இயக்குநர் மைக் ரியான் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர்,
“முகக் கவசங்களையும் கையுறைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருதி அணிவது மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியாது. முகக் கவசங்கள் அணிவதை விட கைகளை அடிக்கடி கழுவுவது, முகத்தில் கை படாமல் பார்த்துக் கொள்வது ஆகியவையே கொரோனா பரவலை தடுக்க உதவும். மருத்துவர்கள் அணிவதற்கு முகக்கவசங்கள் கிடைக்காத நிலை உள்ளது. கொரோனா பரவல் அதிகமாகு போது இந்நிலை மேலும் மோசமாகும்” என்று அவர் தெரிவித்தார்.
கொரோனா வராமல் தடுக்க முகக் கவசங்கள் அணியுங்கள் என தாங்கள் அறிவறுத்தவே இல்லை என்றும் ஆனால் பாரிஸ் தெருக்களில் அதை அணிந்து செல்வோரை அதிகம் காண முடிவதாகவும் பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஆலிவர் வெரேன் தெரிவித்தார்