துபாயில் ஒட்டகங்களுக்கு என தனி மருத்துவமனை செயல்படத்தொடங்கியுள்ளது.
பல கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட இந்த மருத்துவமனை கடந்த ஆண்டே திறக்கப்பட்டது. எனினும் கடந்த வாரம்தான் முறைப்படி மருத்துவமனையில் ஒட்டகங்களுக்கான சிகிச்சைகள் தொடங்கப்பட்டன.
அறுவை சிகிச்சை அறை, எக்ஸ்ரே அறை என நவீன முறையில் இங்கு ஒட்டகங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது தவிர ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட ஒட்டகங்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய அளவுக்கு இந்தியா, பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் மெக்சிகோ நாடுகளைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.