உலகம்

கலிஃபோர்னியாவில் ஒரு வாரமாக எரியும் காட்டுத்தீ

கலிஃபோர்னியாவில் ஒரு வாரமாக எரியும் காட்டுத்தீ

webteam

கலிஃபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க முடியாமல் ஒரு வாரமாக போராடி வருகின்றனர்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள வென்சுராவில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக காட்டுத்தீ தொடர்ந்து கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. ஏராளமான வீடுகள், கட்டடங்கள் எரிந்து சாம்பலாகி விட்டன. இதைத் தொடர்ந்து வென்சுராவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வீடு இழந்தவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மூலம் ரசாயன பொடியை தூவி காட்டுத் தீயை அணைக்கும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுவரை 2 ல‌ட்சத்து 30‌ ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நிலப்பகுதிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்களும் இந்த காட்டுத் தீயில் எரிந்து நாசமாகி இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். சான்டா பாலா என்ற பகுதியில் காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க முயலும்போது 70 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்து‌ள்ளார்.