கலிஃபோர்னியாவில் மருத்துவம் தவிர்த்து கஞ்சாவை போதைக்குப் பயன்படுத்துவதை தடுக்க நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கலிஃபோர்னியா மாகாணத்தில் மருத்துவத்திற்காக மட்டுமே கஞ்சா பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என போதைப் பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். கலிஃபோர்னியாவில் புத்தாண்டு முதல் கஞ்சாவை மருத்துவத்துறையில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போதைப்பொருள் யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, கஞ்சாவை பொழுதுபோக்கிற்காக பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்றும், மருத்துவரின் அறிவுறுத்தலின் படி பயன்படுத்த வேண்டும் எனவும் போதைப் பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கலிஃபோர்னியாவில் 12 கடைகளுக்கு கஞ்சா விற்பனை செய்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் யாருக்கெல்லாம் விற்பனை செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும் என போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.