உலகம்

கலிஃபோர்னியா சட்டசபைக்கு 2 மாத குழந்தையுடன் வந்த உறுப்பினர்

Sinekadhara

கலிஃபோர்னியா சட்டமன்ற உறுப்பினர் பஃபி விக்ஸிற்கு ப்ராக்ஸி வாக்கு(தனக்கு பதிலாக நம்பகத்தன்மை உள்ள ஆள்மூலம் வாக்கு அளித்தல்) அளிக்க மறுக்கப்பட்டதால் தனது பிறந்த குழந்தையுடன் கலிஃபோர்னிய சட்டசபைக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்த கலிஃபோர்னியா சட்டமன்ற உறுப்பினர் பஃபி விக்ஸ், இரண்டு வாரங்களுக்கு முன்பு ப்ராக்ஸி மூலம் வாக்கு அளிக்க கோரிக்கை வைத்திருந்தார். மேலும் கொரோனா காரணமாக இந்த சமயத்தில் வெளியே வருவது சிரமம் என்றும் மேற்கோள் காட்டியிருந்தார். ஆனால் அவருடைய கோரிக்கைக்கு சட்டமன்ற சபாநாயகர் அந்தோனி ரெண்டன் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதனால் விக்ஸ் தனது குழந்தையை சட்டசபைக்கு அழைத்து வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு மசோதா பற்றி பேசும்போது விக்ஸ் தனது குழந்தைக்கு பாலூட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி ஹிலாரி க்ளிண்டன் உட்பட பல முக்கிய அரசியல் பிரமுகர்களால் பரவலாக பகிரப்பட்டுள்ளது.