கிரீஸ் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள பட்டாம்பூச்சி வடிவிலான விசித்திரமான சுவரில்லா வீடு விற்பனைக்கு வந்துள்ளது.
கிரீஸ் நாட்டின் கடற்கரை பகுதியில் ஒரு விசித்திர வீடு கட்டப்பட்டுள்ளது. 5,381 சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீட்டில் சுவர்களே இல்லை என்பதுதான் இதன் சிறப்பம்சம். ஆனால் இந்த வீட்டில் நான்கு படுக்கையறைகள், நான்கு குளியலறைகள் மற்றும் நீச்சல் குளம் அடங்கிய பல ஆடம்பர வசதிகள் அடங்கியுள்ளன.
இந்த வீட்டை மேலிருந்து பார்க்கும்போது சிறகை விரித்த பட்டாம்பூச்சியை போன்றே இருக்கிறது. மேலும் இந்த வீடு செயற்கை ஏரிகள் மற்றும் மிதக்கும் பாதைகளால் சூழப்பட்டுள்ளது.
சுற்றிலுமுள்ள பசுமை இந்த வெள்ளை நிற கட்டடத்தின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. இத்தனை சிறப்புமிக்க இந்த வீட்டின் விலை 5.2 மில்லியன் பவுண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.52 கோடிகளாம்.