ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சிரியாவில் பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது.
உள்நாட்டு போர் காரணமாக சிரியாவில் பேருந்து சேவை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. தலைநகர் டமாஸ்கஸில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகள் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் மீண்டும் இயங்கத் தொடங்கின.
பாதுகாப்புக்காக டமாஸ்கஸில் இருந்து கமிஷிலி நகருக்கு செல்லும் வழியில் பல சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஆறு ஆண்டுகளாகப் பிரிந்திருக்கும் குடும்பங்கள் இந்தப் பேருந்துச் சேவை மூலம் இணைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. எனினும் பயங்கரவாதிகளால் பேருந்துகள் தாக்கப்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.