மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட விபத்தில், வானுயர தீப்பிழம்புகள் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மலேசியா கோலாலம்பூருக்கு வெளியே சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள புத்ரா ஹைட்ஸ் பகுதியில் அமைந்துள்ள எரிவாயு குழாய் இன்று வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Petronas என்ற தேசிய எண்ணெய் நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் எரிவாயு குழாயில் காலை 8:10 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், பாதிப்படைந்த குழாய் உடனடியாக மூடப்பட்டதாகவும் அறிவித்தது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகில் இருந்த மூன்று எரிவாயு நிரப்பும் நிலையங்களும் மூடப்பட்டதாக Petronas நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்தான வீடியோ வெளியாகியுள்ளது. இவை காண்பதற்கு அணுகுண்டு வெடித்து சிதறியது போன்று உள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தற்போது அதற்கான பணி நடைப்பெற்று வருகிறது.
இந்த தீ விபத்தில் குறைந்தது 49 வீடுகள் சேதமடைந்ததாகவும், இதுவரை 112 பேர் தீ காயமைடந்துள்ளதாகவும், 82 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 63 பேர் தீக்காயங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பயங்கர தீ விபத்தில் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு வரும்நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
20 மாடிகட்டிடம் ஒன்றின் அளவில் வானுயர எழும்பிய தீப்பிழம்புகள் காண்போரை காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .