மெக்கா மசூதி வளாகத்துக்குள் இஸ்லாம் பெண்கள் வரிசை விளையாட்டு விளையாடியது சர்ச்சைக்கு உள்ளானது. இதையடுத்து சவுதி அரேபிய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாக விளங்குவது மெக்கா மசூதி. இங்கு உலகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் இந்த மசூதி வளாகத்தில் பர்கா அணிந்திருந்த நான்கு பெண்கள், ஒரு போர்டை வைத்து விளையாடிக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதை எதிர்த்து பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இந்தப் புகைப்படம் சர்ச்சையை கிளப்பியது. இதை அடுத்து சவுதி அரேபிய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதில், ‘கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில், இந்த பெண்கள் மசூதி வளாகத்துக்குள் Sequence எனப்படும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட மசூதி பாதுகாவலர்கள் அவர்களிடம் விசாரித்தனர். புனிதமான இந்த வளாகத்துக்குள் இப்படி விளையாடக் கூடாது என்று அறிவுரை கூறியதை அடுத்து அவர்கள் சென்றுவிட்டனர்’ என்று கூறியுள்ளது.