உலகம்

புத்தாண்டில் புது சாதனை படைத்த துபாயின் புர்ஜ் கலிபா

புத்தாண்டில் புது சாதனை படைத்த துபாயின் புர்ஜ் கலிபா

webteam

துபாயின் அடையாளமாக விளங்கும் உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா கட்ட‌டம் புத்தாண்டு தினத்தில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. 

புத்தாண்டு உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. துபாயில். சுமார் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 252 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள கட்டடம், புர்ஜி கலிபா. இதைப் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். துபாயின் அடையாளமாக விளங்கும் இந்த உயரமான கட்டிடத்தில் பாலிவுட் நடிகர்கள் உட்பட பலருக்கு சொந்தமாக வீடுகள் உள்ளன. இங்கு புத்தாண்டை ஒட்டி, வாண வேடிக்கை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அது கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. பின்னர் கண்கவர் லேசர் காட்சி நிகழ்த்தப்பட்டது.

இங்கு ஒரே கட்டடத்தில் மிகப்பெரிய லேசர் மற்றும் இசை நிகழ்ச்சி நடத்தி, துபாய் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சுமார் 5 நிமிடங்களுக்கு இசைக்கேற்ப நடனமாடும் லேசர் விளக்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சுமார் 80 இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர்.

இந்த சாதனை நிகழ்ச்சியை புத்தாண்டு அன்று பார்க்க தவறியவர்கள், 6-ம் தேதி வரை தொடர்ந்து இரவு 8 மணிக்கு கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.