பிரான்சில் இரண்டாம் உலகப் போரின் போது உருவாக்கப்பட்ட பதுங்குக் குழிகள், விருந்தினர் இல்லங்களாக மாற்றப்பட்டுள்ளன.
வடக்கு கடற்கரை பகுதியில் 1940ஆம் ஆண்டு இரண்டாம் உலக போரின் போது பல்வேறு பதுங்குக் குழிகளை அமைத்தனர். இங்கு ரேடார் நிலையங்களை அமைத்து விமானங்களை அவர்கள் கண்காணித்து வந்ததாக தெரிகிறது. தற்போது செர்ஜி என்பவர், அந்த பதுங்குக் குழிகளை விருந்தினர் இல்லங்களாக மாற்றியுள்ளார். 400 சதுர மீட்டர் கொண்ட இந்த பதுங்குக் குழிகளை 18 மாதங்களில் விருந்தினர் இல்லமாக மாற்றி தற்போது வாடகைக்கு விட்டுள்ளனர்.