இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எடுத்துச்சென்ற சொத்துகளின் மதிப்பு சுமார் 5 ஆயிரத்து 500 லட்சம் கோடி ரூபாய் என ஆக்ஸ்ஃபேம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த பணத்தை 50 பவுண்டு பணத்தாள்களாக மாற்றினால் லண்டன் நகர சாலைகளில் 4 அடுக்குகளாக பரப்பி நிரப்பலாம் என்றும் அந்த ஆய்வு கூறியுள்ளது. இந்தியாவிலிருந்து சுரண்டப்பட்டு எடுத்து செல்லப்பட்ட செல்வத்தில் சரிபாதி பிரிட்டனின் பெரும் பணக்காரர்கள் 10 பேருக்கு மட்டுமே சென்றதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
காலனி ஆதிக்கம் மூலம் உலகின் தென் பாதியில் உள்ள நாட்டு மக்களின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வட பகுதி மக்களின் சொத்தாக மாறியதாகவும் ஆக்ஸ்ஃபேம் அறிக்கை தெரிவிக்கிறது.