இங்கிலாந்தைச் சேர்ந்த மாடல் அழகியை கடத்தி, சித்ரவதை செய்து ஏலம் விடப்போவதாக மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 20 வயது மாடல் அழகி இத்தாலி பயணம் செய்திருந்தார். அங்குள்ள மிலன் நகரில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது அவரை ஒரு மர்ம நபர் கடத்தி சென்றார். பின்னர் மாடல் அழகியை ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் தனி அறையில் அடைத்து வைத்து, 6 நாட்களாக தொடர்ந்து போதை மருந்துகள் கொடுத்து சித்ரவதை செய்தார்.
மேலும் ரூ.20 கோடி (3 லட்சம் அமெரிக்க டாலர்) பிணைத் தொகை வழங்க வேண்டும். இல்லாவிடில் மாடல் அழகியை இணையதளம் மூலம் ஏலத்தில் விற்பேன் என்றும் மிரட்டல் விடுத்தார். இதற்கிடையே கடத்தப்பட்ட மாடல் அழகியை தேடி வந்த போலீசார் மிலனில் ஏற்கனவே மூடப்பட்ட இங்கிலாந்து தூதரகம் அருகே மீட்டனர். இது தொடர்பாக மாடல் அழகியை கடத்திய மர்ம நபர் கைது செய்யப்பட்டார். போலந்து நாட்டை சேர்ந்த அவர் இரட்டை குடியுரிமை பெற்றவர் எனத் தெரியவந்துள்ளது.